பனிதாவின் லேட்டஸ்ட் அசத்தல் போட்ஷூட்ஸ்

விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடிப்பில் வந்த ஆதித்ய வர்மா திரைப்படத்தில் நாயகியாக நடித்தவர் பனிதா சந்து.

தற்போது 21 வயதாகும் பனிதா சந்து ஏற்கனவே அக்டோபர், பண்டோரா போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

சமூகவலைத்தளத்தில் வைரலாக பனிதாவின் லேட்டஸ்ட் அசத்தல் போட்ஷூட்ஸ் புகைப்படங்கள் இதோ….

View this post on Instagram

just me & my besties ?

A post shared by Banita Sandhu (@banitasandhu) on

View this post on Instagram

hotel room series ?

A post shared by Banita Sandhu (@banitasandhu) on

ஆதித்ய வர்மா

தெலுங்கில் விஜய் தேவர்கொண்டா, ஷாலினி பாண்டே நடிப்பில் வெளிவந்த அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் தமிழ் ரீமேக் திரைப்படம் ‘ஆதித்ய வர்மா ‘.

முதலில் இத்திரைப்படத்தை பிரபல தமிழ் தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலா இயக்கியிருந்தார். ஆனால் இவரின் இயக்கத்தில் உருவான ‘ஆதித்ய வர்மா ‘ திரைப்படத்தில் திருப்பியடையாத தயாரிப்பு நிறுவனம் மீண்டும் இத்திரைப்படத்தை இயக்குனர் Gireesaaya ஐ வைத்து இயக்கி திரைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.

இயக்குனர் பாலாவை இத்திரைப்படத்தில் இருந்து இறுதி நேரத்தில் விளக்கியிருந்தமை திரையுலகில் பெரும் பரபரப்பை உண்டாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

‘ஆதித்ய வர்மா’ திரைப்படத்தில் நடிகர் விக்ரம் மகன் துருவ் விக்ரம், மற்றும் பனித்த சந்து, பிரியா ஆனந்த், மற்றும் பலர் நடித்துள்ளனர்.

மேலும் இத்திரைப்படத்துக்கு Radhan இசையமைத்துள்ளார்.

வெளியான ‘ஆதித்ய வர்மா’ திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தாலும் சமூக ஆர்வலர்களிடம் இருந்து கடும் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது.

திரைப்படத்தின் நாயகன் குடி, போதை, என நடித்திருப்பது இளைய தலைமுறையினரையும் தவறான பாதைக்கு இட்டு செல்லும் என சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.

இவ்வாறான குற்றச்சாட்டுக்களை தவிர்த்து விக்ரம் மகன் துருவ விக்ரமின் நடிப்பு பலராலும் பாராட்டுக்களை பெற்று வருகிறது.

கோபம், வெறித்தனமான காதல், பாசக்கார மகனாக, நல்ல நண்பனாக, மருத்துவராக, என அனைத்து கட்டங்களிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி துருவ விக்ரம் நடித்துள்ளார்.

மேலும் இசையமைப்பாளர் ரத்தன் இசையில் வெளிவந்துள்ள பாடல்களும், பின்னணி இசையும் ரசிகர்களை ரசிக்க வைக்கின்றன.

திரைப்படத்தில் இடம்பெற்ற அதிகளவிலான முத்த காட்சிகள், உடலுறவு காட்சிகளால் திரைப்படத்துக்கு ‘ஏ ‘ சான்றிதழே திரைப்பட தணிக்கை குழுவால் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் ஆதித்ய வர்மா திரைப்படத்தின் முதல் பாதியில் இருந்த விறுவிறுப்பு, திரைப்படத்தின் இரண்டாம் பாதியில் இல்லை என பலராலும் கூறப்படுகிறது.

ஆக ஒட்டுமொத்தத்தில் ஆதித்ய வர்மா திரைப்படம் துருவ விக்ரமுக்கு மட்டும் கைகொடுத்துள்ளது என கூறலாம்.

Banita Sandhu latest photshoot